Tuesday, August 20, 2013

கற்பைக் 'குறி'வைத்த சித்தர்

ராத்திரி பூஜைன்னா அப்படித்தான்!
கற்பைக் 'குறி'வைத்த சித்தர்
பெற்ற மகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய தாய், பெண் களை விபசாரத் தொழி லுக்குப் பழக்கிய போலி சித்தர், இவர்களுக்கு ஆள் பிடித்துக்கொடுத்த கும்பல், இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போலீஸ்... என்று அத்தனையும் வெளிச் சத்துக்கு வந்துள்ளது. அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் சமூகத்தின் மீதான அச்சத்தையும் அருவருப்பையும் அதிகப்படுத்தி உள்ளது இந்தச் சம்பவம். பெற்ற தாயால் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ள விவரங்கள் பதைபதைக்க வைக்கின்றன.   
''என் பெயர் அமுதா. என் அம்மா பெயர் வசந்தி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). நான்கு ஆண்டுகளுக்கு முன் எனது அப்பா மாரியப்பன் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். என் அம்மாவுக்கு விபசாரம்தான் முழு நேரத் தொழில். அவரைத் தேடி நிறைய ஆண்கள், வீட்டுக்கு வருவார்கள். எங்கள் வீட்டில் ஒரே அறைதான். அங்கே நான் இருப்பதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் என் அம்மா, வீட்டுக்கு வரும் ஆண்களுடன் படுத்திருப்பார். இதை நான் தினமும் பார்ப்பேன். அதனாலேயே என் கவனம் படிப்பில் இருந்து சிதறியது.
எங்கள் பகுதியில் அறவழிச் சித்தர் என்ற குறி சொல்லும் சாமியார் இருந்தார். என் அம்மா அவரைப் பார்க்க அடிக்கடி போவார். 'உனக்கு நல்ல படிப்பு வர ராத்திரி பூஜை பண்ணணும்னு சித்தர் சொல்லிருக்கிறார்’ என்று, அம்மா ஒருநாள் சொன்னார். ராத்திரி பூஜைக்கு என்னை மட்டும் அறைக்குள் அனுப்பினார். என் உடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக உட்காரவைத்து, என் உடல் முழுவதும் திருநீற்றைப் பூசினார் சித்தர். பிறகு, தீர்த்தம் கொடுத்தார். அதைக் குடித்ததும் அரை மயக்கமாகி விட்டேன். என்னைப் படுக்கவைத்து சித்தர் எனக்குள் கலந்தார். அதை என்னால் உணர முடிந்தது. ஆனால், கத்த முடியவில்லை. பூஜை முடிந்து வெளியில் வந்து நான் என் அம்மாவிடம் இதைச் சொல்லி அழுதேன். ஆனால், ராத்திரி பூஜைன்னா அப்படித்தான்... இதையெல்லாம் பெருசுபடுத்தாதே!’ என்று சொல்லிவிட்டார்.
அதன்பிறகு அடிக்கடி அந்தச் சாமியாரிடம் என்னை என் அம்மா அனுப்புவார். வேறு வழியில்லாமல் நானும் 'ராத்திரி பூஜை’க்குச் செல்வேன். ஒரு நாள் அந்தச் சாமியார், என்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே கடிகாரம் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருக்கும் குமார் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார். பகல் நேரத்தில் கடைக்குள் வைத்தே குமார் என் மீது கைவைத்தான். தடுத்தேன். என்னை அடித்தான். நான் அழுது அடம்பிடித்தேன். குமார் எனக்கு ஒரு ஊசி போட்டான். நான் மயக்கமானதும் அந்த மிருகம் பட்டப்பகலில் கடைக் குள் வைத்தே என்னை வேட்டை யாடியது.
குமாரோட வீட்டுக்கு என்னை கொண்டுபோனாங்க. அங்கே அவரோட மனைவி ஜெயாவும் அவருடைய தோழி லதாவும் இருந்தாங்க. அவங்ககிட்ட குமார், 'இவளைத் தொழிலுக்கு பழக்கியாச்சு. கொஞ்சம் அடம்பிடிப்பா. அடிங்க... இல்லைன்னா மாத்திரை போட்டு அனுப்புங்க’னு சொன்னான். அதுக்கப்புறம் தினமும் எனக்கு மாத்திரையைப் போட்டு நாலு பேருகிட்ட அனுப்புவாளுங்க. ஒருநாள் ராத்திரி 11 மணி இருக்கும் குமாரோட நண்பர்கள் ஆறு பேர் என்னை ஒரு கார்ல மெரீனா பீச்சுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. என்னைக் கடற்கரை ஓரத்துல படுக்கவெச்சு ஆறு பேரும் விடியவிடிய நாசமாக்கினாங்க. கத்துறதுக்குகூட என் உடம்பில் தெம்பு இல்லை.
ஒருநாள் அதிகாலை குமார் வீட்டுல எல்லோரும் தூங்கிட்டு இருக்கும்போது நான் அங்கிருந்து தப்பினேன். திருப்பதி வந்தேன். அங்கே மாங்காய் வாங்கி வியாபாரம் செஞ்சேன். அங்கேதான் போலீஸ் என்னை விசாரிச்சாங்க. என்னை மீண்டும் என் அம்மாவுடன் அனுப்பாதீர்கள். என்னைக் காப்பாற்றுங்கள்...'' என்று போகிறது அந்தக் கொடுமையான வாக்குமூலம்.
சைல்டு ஹெல்ப் லைன் மூலம் தமிழக போலீஸுக்கு வந்த இந்த விவகாரம் டி.ஜி.பி.ராமனுஜத்தின் கவனத்துக்குப் போனது. அவர் நேரடியாக விசாரித்து வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கடந்த 15-ம் தேதி அறவழிச் சித்தரையும், சிறுமியின் தாய் வசந்தியையும் கைதுசெய்தனர். குமார், அவருடைய மனைவி ஜெயா மற்றும் லதா உள்ளிட்ட கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அறவழிச் சித்தரின் வீட்டுக்குச் சென்றோம். வீடு பூட்டியிருந்தது. அந்த வீட்டு உரிமையாளரின் மகன் சுனிலிடம் பேசினோம். ''15 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் அறவழி சித்தர் வாடகைக்கு குடியேறினார். பெண்கள்தான் அதிக அளவில் குறி கேட்க வருவார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், குறி கேட்கவந்த சிறுமியை சாமியார் கற்பழித்துவிட்டதாக பிரச்னை கிளம்பியது. அப்போதே நாங்கள் வீட்டைக் காலி செய்யச் சொன்னோம். ஆனால், அவர் போகவில்லை. அதன் பிறகு எங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காததால் நாங்களும் விட்டுவிட்டோம்'' என்றார்.
அப்பாவிப் பெண்களை விபசாரத்தில் தள்ளும் இந்த நெட்வொர்க் முழுமையாக அழிக்கப்பட வேண்டும்.

Monday, August 19, 2013

தொடரும் பாலியல் தொல்லைகள்

தொடரும் பாலியல் தொல்லைகள் - பளிச் டிப்ஸ்
உலகின் இயக்கத்துக்குத் தேவையான சக்தியை அளிக்கும் சர்வ வல்லமை படைத்தவள் பெண். ஆனால், இன்றைய பெண்கள் பலரின் நிலையோ பரிதாபம். 
வீடு, கடை, பேருந்து, பள்ளி, கல்லூரி, பணியிடங்கள், பொது இடங்கள் எனப் பல்வேறு சூழல்களிலும் பெண்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். அதில் மிக முக்கியமான பிரச்னை, பாலியல் தாக்குதல்கள். 'நகர்ப்புறங்களில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் பெண்களில் 10 சதவிகிதம் பேர்தான், தனக்கு நேர்ந்தது பற்றி புகார் செய்கிறார்களாம். மற்றவர்கள் அதை வெளியில் சொன்னால் அவமானமோ, ஏதேனும் பிரச்னையோ வந்துவிடும் என்று பயந்து மறைத்துவிடுகிறார்கள்’ என்கிறது ஓர் ஆய்வு.  
ஆக்ஸ்ஃபேம், சமூக மற்றும் ஊரக ஆராய்ச்சி நிறுவனம் சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் மேற்கொண்ட ஆய்வில், வேலைக்குச் செல்லும் 17 சதவிகித பெண்கள் பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், உடல்ரீதியாக இல்லாமல், மனரீதியான தாக்குதல்கள் நடப்பதாக தெரிவித்துள்ளனர். கூட்டமாக இருக்கும் ஆண்கள் பாட்டு பாடுவது, கிண்டல் செய்வது, கமென்ட் அடிப்பது போன்றவற்றைச் செய்வதாக 70 சதவிகிதப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
அலுவலகத்தில் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்போருக்குத் தண்டனை, அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரும் அளவுக்கு பிரச்னை உள்ளது. இந்தச் சிக்கலான பிரச்னையை எப்படித் தெரிந்துகொள்வது? இதனால் மனதளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதைத் தவிர்ப்பது எப்படி? என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
உடன் பணிபுரிபவர், உறவினர், ஆசிரியர், மாணவர், நண்பர், முன்பின் அறிமுகம் இல்லாதவர் எனப் பாலியல்ரீதியான தாக்குதல் யாரிடமிருந்து வேண்டுமானாலும் வரலாம். ஒருவர் நேரடியாகத் தொட்டுச் செய்வது மட்டும் பாலியல்ரீதியான தொந்தரவு இல்லை. ஆபாசமாக கமென்ட் அடிப்பது, செய்கை காட்டுவது போன்றவையும் தொந்தரவுதான். வீட்டில் இருப்பவர்களைவிட பணிக்குச் செல்லும் பெண்களே பாலியல்ரீதியான தொல்லைகளுக்கு அதிகமாக ஆளாகிறார்கள். காரணம் அவர்கள் வேலை செய்யும் இடத்தில் உடன் பணியாற்றுபவர்கள், மேலதிகாரிகள் எனப் பலரையும் சார்ந்து இருக்கவேண்டிய சூழல்.
இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட் பயன்படுத்தாத நபர்களே குறைவு. செல்போனின் மூலமாகவே ஒருவரோடு ஒருவர் 'சாட்’ செய்ய வழி இருக்கிறது. ஃபேஸ் புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பெண்கள் பலர் தங்களின் குடும்ப விவரம், செல்போன் நம்பர் போன்றவற்றை ஈஸியாக விட்டுச்செல்கிறார்கள். இந்தத் தகவல்களை வைத்து சில ஆண்கள், பெண்களிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவதும் நடக்கிறது. சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாத அறிமுகமற்ற ஆண்களிடம் விழிப்போடு இருக்க வேண்டும். அவர்கள் நல்லவர்களா இல்லையா என்பதே தெரியாத நிலையில் தங்களை பற்றிய தகவல்களைக் கொடுப்பது தேவையற்ற பிரசனைகளையே கிளப்பிவிடும்.
''பெண்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் கவனத்துடன் கையாள வேண்டும். பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி செய்ய ஓடோடி வரக்கூடிய சமூகம், அவர்களின் முதுகுக்குப் பின்னால், 'ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழைய முடியும்’ என்று பழைய பஞ்சாங்கத்தைப் பேசவும் தவறுவது இல்லை. அதனால் இதுபோன்ற சிக்கல்களை விடுவிக்க மிகக் கவனமான வழிமுறைகளைக் கையாள வேண்டியது அவசியம்'' என்கிறார் நெல்லையைச் சேர்ந்த மனநல மருத்துவர் 'சினேகா’ பன்னீர் செல்வன்.
''பெண்களைப் போகப்பொருளாக நினைக்கும் ஆண்கள், குடிகாரர்கள், குற்றச்செயல்கள் செய்வதையே வாடிக்கையான நபர்கள், சமூக விரோதிகள், சாதாரண நபர்கள் என யார் மூலமாகவும் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு ஏற்படலாம். வயது வித்தியாசமே இல்லாமல் பாலியல் தொல்லை கொடுத்த ஆண்கள்கூட இந்தச் சமூகத்தில் செய்தியாக வந்துகொண்டுதானே இருக்கிறார்கள். இது போன்ற தொந்தரவுகள், பெண்களுக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில பெண்களுக்கு அந்தத் தவறு மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். இதனால், அவர்களால் நிம்மதியாக எந்த வேலையையும் செய்ய முடியாமல், மன நோயாளியாகவே மாறிவிடும் ஆபத்தும் இருக்கிறது.
பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு மனப் பதற்றம், மன அழுத்தம், தூக்கமின்மை, பசியின்மை, எரிச்சல், வேலையில் ஆர்வமின்மை, நெஞ்சுவலி, கை, கால், தலைவலி உபாதைகள் போன்றவை ஏற்படலாம். எப்போதும்போல அவர்களால் உற்சாகமாக செயல்பட முடியாமல், எதையோ இழந்ததைப்போல இருப்பார்கள். தேவையற்ற பயம் இருக்கும். தனிமையில் இருக்கவே அதிகம் விரும்புவார்கள். இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களிடம் குடும்பத்தினரும் உறவினர்களும் பேசி அவர்கள் மனதில் இருக்கும் பிரச்னையைத் தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அந்த பயத்தில் இருந்து அவர்களை முழுமையாக விடுவிக்க மனநல மருத்துவரால் முடியும். அவசியம் ஏற்பட்டால் அரசின் சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் பெண்கள் குற்றத் தடுப்புப் பிரிவின் உதவியையும் அணுகி பிரச்னைகளைத் தீர்க்க முயலலாம்'' என்றார்.
ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்
 பிரச்னைகளைத் தவிர்க்க...
 பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நடக்கலாம். ஆனால் அதனைத் துணிச்சலோடு எதிர்க்கும் குணத்தை பெண்களிடம் உருவாக்க வேண்டும்.
 குழந்தைப் பருவத்தில் அப்பா, அம்மா, சகோதரன், திருமணத்துக்குப் பின் கணவரைத் தவிர வேறு எந்த ஆணாக இருந்தாலும் உள்ளாடை போடும் இடங்களை தொடக் கூடாது. அப்படிச் செய்வது பாலியல் தொந்தரவு என்பதை, குழந்தைப் பருவத்திலேயே பெண்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
 சில ஆண்கள், தேவையற்ற சமயங்களில்கூட தாங்களாகவே முன்வந்து உதவிசெய்வார்கள். சிலர் இரட்டை அர்த்தத்தில் பேசி சிரிக்கவைக்க முயற்சிப்பார்கள். ஒருசிலர் சாதாரணமாகத் தொடுவதுபோல தோளைத் தொட்டுப் பேசத் தொடங்குவார்கள். இவர்களை முதலிலேயே தவிர்த்துவிட வேண்டும்.
 மூன்றாவது நபர்கள், நாம் கேட்காமலே உதவிசெய்ய வந்தால், அதில் வில்லங்கம் இருக்கிறது என்பதை பெண்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். அதனை முன்கூட்டியே தவிர்ப்பது நல்லது.
 'உங்க புடவை கலர் சூப்பர்... டிசைன் நல்லா இருக்கு’ என்று பேச்சைத் தொடங்கும்போது 'என் புடவை எந்த நிறத்தில் இருந்தால் என்ன சார், வேலையைப் பாருங்கள்’ என்று கறாராக சொல்லிவிட்டால், அடுத்த 'மூவ்’ தவிர்க்கப்படும்.
 அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக்கொண்டு நம்மைக் கவனிக்கும் ஆண்களிடம், பெண்கள் உஷாராக இருக்க வேண்டும். தேவை இல்லாமல் அடிக்கடி போன் செய்தாலும், எஸ்.எம்.எஸ். அனுப்பினாலும் உடனே கண்டிக்க வேண்டும்.
 ஆண் தன்னிடம் தவறாகப் பழகுகிறான் என்பதை, பெண்களால் எளிதாகக் கண்டுபிடித்து விடமுடியும். அப்படித் தெரிந்துவிட்டால், தயவுதாட்சண்யமே பார்க்காமல், 'தப்பு பண்ற... இனி எங்கிட்ட பேசாதே’னு சுருக்கமாக அதே சமயத்தில் துணிச்சலான குரலில் சொல்லிவிட வேண்டும்.
 சில பெண்களுக்கு சிரிக்கவைக்கும் ஆண்களைப் பார்த்து ஈர்ப்பு ஏற்படலாம். அப்படி நடப்பதை உணரத் தொடங்கியதுமே அத்தகைய நட்பை உடனே துண்டித்துவிட வேண்டும். தவறு எந்த பக்கத்திலும் இருந்து வரலாம். ஆனால் பெண்கள் அதிகக் கவனமாக இருந்து தேவையற்ற பழியை சுமக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,
 அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு, அவர்களை பணி அமர்த்தும் நிறுவனங்களே பாலியல் தொந்தரவு எப்படி ஏற்படலாம் என்பது குறித்தும், அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

Sunday, August 18, 2013

ஃபிகரை கரக்ட் செய்வது எப்படி?

ஃபிகரை கரக்ட் செய்வது எப்படி?

(அருமையான பதிவு ஆனால் கொஞ்சம் நீண்ட பதிவு முழுவதுமாக படியுங்கள் :P)

நமது தமிழக ஆண் சமூகத்தின் 'லட்சணம்' முகநூலைப் பார்த்தாலே தெரியும். ஃபிகர் (அது போலி ஃபுரபைலாதான் 90% இருக்கும்) ஃபோட்டோக்கு கீழ போய் "ஹாய் யூ லுக் லைக் ஏஞ்சல்'னு போடுறது, 'ப்ளீஸ் ஆட் மீ ஏஸ் யுவர் ஃபிரண்ட்'னு போடுறது, 'ஹேய். வீ வில் பி பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ். வாட் யூ சே'னு எழுதறது. "எங்க பப்பி இன்னைக்கு பாத்ரூம் போகல"னு போட்டா கூட பதறி துடிச்சு லைக்கும் கமண்ட்டும் போடுறது! இப்படிலாம் பசங்களை பசங்களே அசிங்கப்படுத்துனா அப்புறம் ஃபிகருங்க எப்படி பசங்கள மதிக்கும்? சோ.. ஒரு ஃபிகரை கரக்ட் பண்ண என்ன செய்யனும், என்ன செய்யக் கூடாது? அந்த காதல காப்பாத்த என்ன செய்யனும், என்ன செய்யக் கூடாது போன்ற சில முக்கியமான பாயிண்ட்ஸ் மட்டும் சொல்றேன்... உனக்கேன் இந்த அக்கறை? யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். ஆனால் இதை படித்துமுடித்தவுடன் "நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன்" என்பது உங்களுக்குப் புரியும்! சோ.. தொடர்ந்து படிங்க!

1) "நம்ம முகரைக்கெல்லாம் சுமாரான ஃபிகரு தான் கிடைக்கும்"னு நமக்கு நம்மளே முடிவு பண்ணிட்டு டைரக்டா சுமாரான ஃபிகருக்கு ட்ரை பண்ணக் கூடாது. ஆக்சுவலா எல்லா பசங்களும் இப்படி நினைக்கிறதுனால செம ஃபிகரைவிட தமிழ்நாட்டுல சுமாரான ஃபிகர்களுக்குதான் போட்டி அதிகம். இது நாட்டுக்கே ரொம்ப கேடான விசயம். போட்டி அதிகம்ன்றதால ஒரு சுமாரான ஃபிகர் தன்னத்தானே செம ஃபிகர்னு நினைச்சுக்கக் கூடிய கொடூரமான உயிர்க்கொல்லி அபாயங்கள் இதுல இருக்கு! அப்புறம் அந்த கொடுமையையும் நீங்கதான் அனுபவிக்கனும். எனவே உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு எடுத்தவுடனேயே செம ஃபிகரையே ட்ரை பண்ணுங்க. இது அழகை வைத்து காதலிப்போர்க்கு மட்டும் தான்! குணம்-மனம் எல்லாம் பார்ப்பவர்களுக்கு சுமாரான ஃபிகரும் 'ஹேலி பெர்ரி' தான்!

2) ஆரம்பத்துலேயே ரொம்ப அலைஞ்சு அலைஞ்சு உங்க ஃபிகருக்கு திமிரு ஏத்திவுட்றக் கூடாது. ஒருநாள் பாக்கனும், ஒருநாள் பாக்கக் கூடாது. முக்கியமா முதல்தடவ பேசுறப்ப அந்த பொண்ணுக்கு நீங்க செம திமிரு புடிச்சவன், ஈகோ புடிச்சவன்னு தோணனும். அப்பதான் நீங்க அடுத்தடுத்த தடவ பேசுறப்ப 'இவ்ளோ ஈகோ புடிச்சவனா இருந்தும் நம்மகிட்ட பேசுறானே'னு அதை நினைச்சு அதுவே பெருமை பட்டுக்கும்! போகப் போக ஈகோவ குறைச்சு லவ்வை ஏத்தனும்! முதல் தடவயே வான்டட்டா போய் போய் வழிஞ்சீங்கன்னா "சனியன் இப்படி வழியுதே"னு மனசுக்குள்ள முடிவுபண்ணி மொக்க லிஸ்ட்ல சேத்துருவாய்ங்க! அப்புறம் லவ் ஊத்திக்கும்!

3) "மச்சி இந்த ஃபிகர் எனக்கு செட் ஆகுமாடா?"னு வர்றவன் போறவன்கிட்டெல்லாம் அட்வைஸ் கேக்க கூடாது. செட் ஆகும்ன்ற நம்பிக்கையும், மன உறுதியும் இல்லேனா கடைசி வரைக்கும் முரளி மாதிரியே அலைய வேண்டியதான். இன்ஸ்பிரேஷன் வேணும்னா ஒரு பத்து நிமிசம் எக்ஸ்பிரஸ் அவென்யூல போய் நில்லுங்க. அட்டு பிகர்களுக்கு நல்ல பசங்களும், நல்ல பொண்ணுங்களுக்கு அட்டு பசங்களும் கிடைப்பதுதான் நம் ஊர் நியதிம்குறது புரிஞ்சிரும்! அதுனாலதான் சொல்றேன், முகரை சரி இல்லேனாலும் முயற்சி முக்கியம்!

4) பெண்களுக்கு என்ன வேணும்ன்ற கேள்விக்கு அந்தக்கால 'ஆதாம்'மில் இருந்து இந்தக்கால ஆதம்பாக்கம் நாராயணன் வரை பதில் தேடி அலையிறாய்ங்க. ஆனா இதோட பதில் ரொம்ப ஈசி! பெண்களுக்கு எல்லாமே வேணும். ஆனா அப்பப்போ அது அது வேணும். இந்த ஃபார்முலாவை மெயிண்டைன் பண்றதுல தான் ஆண்களுக்குப் பிரச்சினை. காதல் தேவைப்படுறப்ப காமத்தையும், காமம் தேவைப்படும்போது காதலையும், அன்பு தேவைப்படும்போது கோபத்தையும், டெட்டி பியர் தேவைப்படும்போது ஸ்பைடர் மேனையும் மாத்தி மாத்தி கொடுத்தா லவ் புட்டுக்கும்!

5) லவ் செட்டாகுற வரைக்கும் நம்ம ஐ.சி.யூலயே அட்மிட் ஆயிருந்தாலும் அவ கால் பண்ணா ஃபோனை எடுத்து உருக உருக பேசுவோம். செட் ஆயிருச்சுன்னா நிலைமை மாறிரும். நம்ம எதாவது உயிர் போற வேலைல பிசியா இருப்போம். அப்ப ஃபோன் பண்ணி ரொமான்ட்டிக்கா பேசுனு உயிரை எடுப்பாங்க. நமக்கு எரிச்சலும் கடுப்பும் மிக்ஸ் ஆகி வரும். ஆனா உள்ள எவ்ளோ எரிஞ்சாலும் வெளிய காட்டிக்காம ஒரு அஞ்சு நிமிசம் பொறுமையா கொஞ்சிட்டு ஃபோனை வச்சிரனும். இதை செய்யாம, "உனக்கு அறிவில்லையா? அது இது"னு கத்துனீங்கன்னா லவ்வுல விரிசல் விழுந்துரும்! காதல் பிஞ்சுட்டிருக்க கேப்ல பெண்கள் ரொம்ப வீக்! அப்புறம் இதுக்குன்னே உங்க ஃபிகரோட ஃபிரண்ட் எவனாவது காத்துக்கிட்டிருப்பான். கிடைச்ச கேப்புல 'ஆறுதல்' சொல்றேன் பேர்வழினு சொற்பொழிவு ஆத்தி ஆத்தியே உசார் பண்ணிருவாய்ங்க! பல காதல்கள் இப்படிதான் காலி ஆகுது!

6) உங்க ஃபிகரோட ஃப்ரண்டுங்ககிட்ட (பெண் நண்பர்கள்) ரொம்ப கவனமா இருக்கனும். இந்த பசங்க என்னதான் உள்ளுக்குள்ள பொறுமுனாலும் அடுத்தவன் காதலுக்கு ஹெல்ப் பண்ணுவாய்ங்க! ஆனா இந்த பொண்ணுங்க செத்தாலும் அவங்க ஃபிரண்டு லவ்வுக்கு ஹெல்ப் பண்ண மாட்டாங்க. குறிப்பா பையன் அழகா, காமடியா பேசுறவனா இருந்தா அவ்வளவுதான். எப்படா பிரிச்சு விடுறதுனு இருப்பாங்க. அதுனால அதுங்ககிட்ட வாயை அளவோட விடனும்! நீங்க பேசுற எதுவும் உங்களுக்கு எதிராவே நாளை திருப்பப்படலாம்! ஏன்னா வழக்கை அழகாக 'ட்விஸ்ட்' பண்றதுல ஒவ்வொரு ஃபிகரும் ஒரு ராம்ஜெத்மலானி தான்!

7) உங்க ஆளு அவங்க ஃபிரண்ட் (பசங்க)கிட்ட எவ்ளோ பேசுனாலும் கண்டுக்காதீங்க. ஏன்னா லவ் பண்ணிட்டிருக்கப்ப பொதுவா பொண்ணுங்க தப்பு பண்ண மாட்டாங்க. அவங்க லிமிட்ல கரக்டா இருப்பாங்க. அதுனால சும்மா, "அவன்ட்ட பேசாத இவன்ட்ட பேசாத"னு மொக்க போட்டீங்கன்னா அப்புறம் அவங்க ஃபிரண்ட் கூட பேசுறப்ப, "சே... இவன் எவ்ளோ அப்பாவியா இருக்கான். இவன்கூட நம்மளை சேத்து சந்தேகப்பட்டுட்டானே"னு உங்க மேல கோபமும், ஃபிரண்டு மேல சிம்பதியும் வந்து தொலைச்சுரும்! அப்புறம் காலப்போக்குல அது முத்திப் போயி காதலா கூட மாற வாய்ப்பிருக்கு! அதுபோக அந்த காதலுக்கு விதை நீங்க போட்ட மாதிரியும் ஆயிரும்! இந்த அவமானம் நமக்கு தேவையா? அதுனால சந்தேகப்படுறவன் காதலிக்க கூடாது. காதலிக்கிறவன் சந்தேகப்படக் கூடாதுங்குறதை கரக்டா ஃபாலோ பண்ணனும்.

7.2) அதுக்காக, "நீ எவன்கூட வேணாலும் எவ்ளோ நேரம் வேணாலும் பேசுடா செல்லம்... நான் எழவு காத்துட்டு உக்காந்திருக்கேன்"னு இருந்தீங்கன்னா, "என்ன இவன்? நம்மமேல பொசசிவ்நெஸ்சே இல்லாம இருக்கான். நம்மளை இவன் உண்மையா லவ் பண்ணலையோ"னு தோண ஆரம்பிச்சிரும். அப்புறம் அதுவும் பிரச்சினை. அதுனால உண்மைலயே உங்களுக்கு சூடு, சொரணை எதுவுமே வரலேனா கூட கொஞ்சமா கோபப்பட்டுக்கனும். லிமிட் ரொம்ப முக்கியம்!!

 உங்களை லவ் பண்ற பாவத்துக்காக உங்க ஆளுக்கு தனிப்பட்ட வாழ்க்கையே இருக்க கூடாது, எங்க போனாலும் உங்க கூடதான் போகனும், எப்ப பாத்தாலும் உங்க கூடதான் இருக்கனும்னு 'அடம்' புடிக்கக் கூடாது. அவங்க ஃபிரண்ட்சோட, கூட வேலை பாக்குறவங்களோட வெளிய போறது, சினிமாக்கு போறதையெல்லாம் புடிக்கலேனாலும் புரிஞ்சுதான் ஆகனும். அதைவிட முக்கியம் வெளிய அவங்க ஊர் சுத்திட்டு வந்தோன அந்த கதையெல்லாம் சொல்றேன் பேர்வழினு ஒரு கொடூர மொக்கை போடுவாங்க. அதை காது கொடுத்து கேக்குற பெருந்தன்மையும் இருக்கனும். நல்லா தெரிஞ்சுக்கங்க... பெண்களுக்கு பேசுறவனைவிட, கேக்குறவனை ரொம்ப புடிக்கும்! ஏன்னா பெண்களுக்கு பேச ரொம்ப புடிக்கும்!

9) உங்க ஆளோட அண்ணன் ஒரு 'டொக்கு டோங்கிரி'யா இருப்பான். அப்பன் ஒரு காமடி பீஸா இருப்பாரு. ரெண்டு பேருமே, உங்க ஆளு எந்த காலேஜ்ல படிக்குதுனு கூட தெரியாத, என்ன ஆனாலும் கண்டுக்கவே கண்டுக்காத மன்மோகன்சிங்கா இருப்பாய்ங்க. ஆனா, "எங்கப்பா அபியும் நானும் பிரகாஷ்ராஜ் மாதிரி" , "எங்கண்ணன் தங்கைக்கோர் கீதம் டி.ஆர் மாதிரி"னு அப்பப்ப உங்க ஆளு அடிச்சு விடும். உண்மை உங்களுக்கு தெரிஞ்சாலும் மனசுக்குள்ளயே புதைச்சிக்கிட்டு, "எனக்கு இப்படி ஒரு அப்பா கிடைக்கலையே. எனக்கு இப்படி ஒரு அப்பத்தா கிடைக்கலையே"னு ஃபீல் பண்ற மாதிரி அடிச்சு விடனும். ஏன்னா முக்கால்வாசி ஃபிகருங்க வீட்டை ஏமாத்துறோமேனு ஒரு குற்ற உணர்ச்சியோடயேதான் லவ் பண்ணும்ங்க. அதை சரிகட்டதான் அப்பப்ப அப்பாவையும், அண்ணனையும் புகழ்றது! இது தெரியாம நீங்க "உங்கப்பன் கிடக்கான் தண்டம். உங்கண்ணன் கிடக்கான் முண்டம்'னு உண்மைய பேசுனீங்கன்னா காதல் காலி ஆயிரும்!

10) சாம தான பேத தண்டம் முறைகளை எல்லாம் கடைபுடிச்சும் அந்தக் காதல் புட்டுக்குச்சுனு வைங்க. "செத்துருவேன், கைய வெட்டிக்குவேன், நாக்க புடுங்கிக்குவேன்"னு அடம்புடிக்கப்படாது. காதலை 'break up' செய்ய அவங்களுக்கு எல்லா உரிமையும் (தவறான காரணமாக இருந்தால் கூட) இருக்குன்றதை புரிஞ்சு நாகரீகமா சமாதானப் படுத்த ட்ரை பண்ணா திருப்பி அதே காதல் கிடைக்க வாய்ப்பு இருக்கு. நம்மளே நாளைக்கு நம்ம காதல் தோல்விய நினைச்சுப் பாக்குறப்ப 'காதலி'யை குற்றம் சொல்ற மாதிரி இருக்கனுமேயொழிய நம்மளை நினைச்சு நம்மளே கேவலப்படுற மாதிரி இருக்கக் கூடாது. ஏன்னா நல்ல காதலனா இருக்கோமான்றதை விட நல்ல மனுசனா இருக்கோமான்றதுதான் முக்கியம்!

என்ன செஞ்சும் உடைஞ்ச லவ்வை ஒட்ட வைக்க முடியலைனா காதலை நியாபகப்படுத்தும் எல்லா விசயங்களில் இருந்து ஒதுங்கி இருக்கனும், தூக்கி எறிஞ்சிரனும். ஒரு விலை உயர்ந்த காரை நம்மளால வாங்க முடியலேனா தினமும் அந்த கார் கடைக்கு போய் அது அங்க நிக்குதா? எவன் வாங்குனான்? நல்லா வச்சிருக்கானா?னு பாக்குறது நமக்குதான் மேலும் மேலும் பிரச்சினை. கார் அதுபாட்டுக்கு கிளம்பி போயிரும். நமக்குதான் வலியும் வேதனையும். அதுனால கிடைக்கலேனா அந்தப் பக்கமே போகக் கூடாது!! "காதல்னா பூ மாதிரி. உதிர்ந்தா ஒட்ட வைக்க முடியாது"னு மொக்க டயலாக் பேசாம நமக்கான காதல், காதலி இது இல்லப்பானு அடுத்த காதலுக்காக காத்திருக்க ஆரம்பிச்சிரனும். வாழ்க்கையின் எதார்த்தம் அதான். அப்படி வாழ்க்கையை எதார்த்தமா வாழ்றவன் காதல்ல மட்டுமில்ல எல்லாத்துலயுமே ஜெயிப்பான்! ஆல் தி பெஸ்ட்! 

Saturday, August 17, 2013

மதம்

அன்புள்ள அம்மா—
எனக்கு 28 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. என் கணவரும், நானும் ஜாதி, மதம், மொழி, மாநிலம் இவற்றால் வேறுபட்டவர்கள். பதிவு திருமணம் செய்து கொண்டோம்.
மதம் மாறுவதில், அதிலும் திருமணத்துக்காக மதம் மாறுவதில் சிறிதும் நம்பிக்கை இல்லை. அன்பையும், வாழ்க்கையையும் பகிர்ந்து கொண்டோம். மதத்தை ஒருவர் மீது மற்றவர் திணிப்பதை வெறுத்தோம். 
அதனால், எங்கள் பிள்ளைகளையும் அவர்களாக ஒரு மதத்தை சம்மதத்துடன் ஏற்றுக் கொள்ளட்டும் என்று வளர்த்து விட்டோம். 
மகள், மகன் முறையே 26, 20 வயது உடையவர்கள். இவர்களை கல்லூரியில் சேர்த்த போது, "மதம்' என்ற வெற்றிடத்தை அப்ளிகேஷன் பாரத்தில் பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில், அவர்களது தந்தையின் மதத்தின் பெயரை குறிப்பிட்டோம். 
ஆனால், அவர்கள் இருவரும் எந்த மதத்தையும் பின்பற்றாமல் மனதளவில் நல்லவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர் களுக்கு திருமணம் என்று வரும்போது, மதம் என்ற பிரச்னை பெரிதாக தோன்றுகிறது.
மேலும், இத்தனை ஆண்டு நாங்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து விட்டோம். இப்போது, எங்கள் மரணம் என்ற தவிர்க்க முடியாத விஷயம், என் மனதில் சஞ்சலத்தை கொடுக்கிறது. சாவை கண்டு பயம் அல்ல. என் கணவரும், நானும் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள்.
எங்கள் திருமணம் சட்டபூர்வமானது தான். ஆனால், எங்கள் மத குருக்களும், மற்றவர்களும் அங்கீகரிக்க மாட்டார்கள். இதனால், நாங்கள் இறந்து போன பிறகு எங்கள் உடல்களை வைத்து, இறுதி சடங்குகளில் எங்கள் இருவரது மதத்தினரும் குழப்பம் செய்யக்கூடும் என்று அஞ்சுகிறேன்.
நாங்கள் இறந்த பின், உயிருடன் இருக்கும் எங்களது குடும்பத்தினருக்கு தொல்லை இருக்கக் கூடாது என்பது எங்கள் விருப்பம். எங்கள் மரணத்துக்குப் பின் எங்கள் உடலை எப்படி, அடக்கம் செய்யலாம் என்று ஆலோசனை கூறுங்கள். 
நாங்கள் யாரை அணுக வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. தயவு செய்து உதவி செய்யுங்கள்.
— அன்புடன் சகோதரி.
பின்குறிப்பு:

இந்த விஷயத்தை பற்றி எங்களது நண்பர்களிடம் பேசினோம்... "இதை, அன்றே நினைத்து பார்த்திருக்க வேண்டும்...' என்பது போன்று தான் சொல்கின்றனர். வாழ்க்கையை தொடங்கிய நேரத்தில், மரணத்தை பற்றி அதிகமாக நாங்கள் நினைக்கவில்லை என்பது உண்மைதான்.

அன்பு சகோதரிக்கு —
உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்களும் உங்கள் கணவரும், கலப்பு திருமணம் செய்து கொண்டதா கவும், இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்வதாகவும் எழுதியிருக்கிறீர்கள். 
இருந்துமே தங்களது ஜாதியை அடுத்தவருக்கு வற்புறுத்தாமல், குழந்தைகளிடமும் திணிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, மரணத்திற்கு பின் புதைப்பரா, எரிப்பரா... எந்த மத அடிப்படையில் ஈமக் கிரியைகள் நடக்கும் என்பது பற்றி என்ன கவலை?
சகோதரி, மற்றவர்களைப் போல் நாமும் ஏதோ ஒரு மதத்தை பின்பற்றிதான் ஆக வேண்டும். அப்போது தான் நாம் இறந்த பிறகு நம்மை நல்லடக்கம் செய்ய, இரு மதத்தில் ஒன்றாவது முன் வரும் என்பதெல்லாம், தேவையில்லாத கவலை என்று தான் நான் சொல்வேன்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? திருமணத்தின் போதும், குழந்தை பிறப்பின் போதும் தான், எந்த ஜாதியின் அடிப்படையில் திருமணம் செய்விப்பது... குழந்தைக்கு பெயர் வைப்பது போன்ற பிரச்னைகள் கிளம்பும். எல்லாரும் ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி, முறைத்தபடி நிற்பர்.
ஆனால், ஒரு மனிதன் இறந்து விட்டால், அத்தனை பேருமே அடுத்தாற்போல, சடலத்தை எப்போது எடுப்பது என்பதில்தான் தீர்மானமாக இருப்பர். அதிக நேரம் காக்க வைக்க மாட்டார்கள்.
அப்படி இரு மதத்தினருக்கும் பிரச்னை வந்தால், அருகிலிருக்கும் சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் எடுத்து போய் உடலை எரிப்பதோ, புதைப்பதோ, ஏதோ ஒன்றை செய்து விடுவர்.
அப்படி ஏதோ ஒன்றை எந்த மதத்தின் அடிப்படையில் செய்ய வேண்டும் என்று ஏன் கவலைப்படுகிறீர்கள். வாழ்கிற நாளெல்லாம் உங்களை மதமா காப்பாற்றுகிறது? மனிதம் ஒன்றே புனிதம் என்றுதானே நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... நாம் இறந்த பிறகு, நமக்குள் இருந்த ஜீவன், மேலும் இருக்கப் போகிறதா அல்லது காற்றோடு கரைந்து விடப் போகிறதா என்பது இதுவரையில் யாருமே கண்டுபிடிக்காத புதிர்.
ஆன்மா என்று ஒன்று இருக்கிறது. அதற்கு, இது போன்ற இறுதி சடங்குகளும், சம்பிரதாயங்களும் செய்தால் தான், அது இறைவனிடம் போய் சேரும் என்று நீங்கள் கருதினால், அந்த இறைவன் இப்போது கூட உங்களுக்கு வெகு சமீபத்தில் தான் இருக்கிறார். 
வாழ்க்கை முழுவதும் அன்பிலேயே குளித்து எழுந்த ஜீவனுக்கு, ஆண்டவனிடம் போய் சேர மதம் என்கிற, "விசா' தேவையில்லை. அப்படிப்பட்ட மத சடங்குகள் இல்லாவிட்டாலும் நல்லவர்களின் ஆன்மா, தன்னை சுற்றியுள்ளவர்கள் நல்லபடி இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கும்; வாழ்த்தும்.
வேண்டுமானால் ஏதோ ஒரு தொகையில் உங்கள் இறப்பிற்கு பின் அன்னதானம் செய்வதற்கோ, மருத்துவ உதவிக்கோ, கல்விக்கோ, நீங்கள் ஒதுக்கலாம். இதுவே மிகச்சிறந்த வழி. எல்லா மதமும் இதையே வலியுறுத்துகின்றன.
உங்கள் குழந்தைகள் இருவருமே உங்களைப் போலவே அவரவர்களுக்கு பொருத்தமான, பிடித்த துணையை தேடிக் கொள்ளட்டும். அக்காலத்தில் உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் இருந்த துணிச்சலில் கொஞ்சமாவது அவர்களுக்கு இருக்காதா! 
எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்றும், நான் இறந்த பிறகு நம்மை என்ன செய்வர் என்றும் அனாவசியமாக கவலைப்படுவதை விட்டு வாழ்க்கையை அனுபவியுங்கள்.
காக்கைகளும், குருவிகளும், நாய்களும், பூனைகளும் இந்த கவலையெல்லாம் இல்லாமல் எத்தனை சந்தோஷமாக இருக்கின்றன...
மரணத்தை இப்போதிருந்தே ஆரத்தி கரைத்து வரவேற்க வேண்டாம்!
வாழ்தலில் பற்று வையுங்கள்; வாழ்த்துகள்!

Saturday, August 10, 2013

அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு—
தங்கள் முகம் தெரியாத மகள் எழுதுவது. எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம். என்னுடன் பிறந்தவர்கள் இரு அண்ணன்; ஒரு தம்பி. நான் ஒரே பெண். இப்போது, என் வயது 17. என் 12வது வயதில் ஒருவரை நேசித்தாள் என் வயது டைய உறவுக்கார பெண் ஒருத்தி. தன் காதலைப் பற்றி தினமும் என்னிடம் கூறுவாள் .
அந்தக் கதைகளை கேட்டதால், அந்த வயதில் எனக்கு, "வருங்காலத்தில் நாமும் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்ற எண்ணம் வரும். காதல் வீட்டிற்கு தெரிய, அந்த பையனை என் கண் எதிரிலேயே அடித்தான் அவள் அண்ணன். அதை பார்த்த எனக்கு, காய்ச்சலே வந்துவிட்டது.
என் 15வது வயதில் என் மாமாவின் மகனை கண்டபோது... "ஏன் இவரை என் வாழ்க்கை துணைவராக தேர்ந்து எடுக்கக்கூடாது...' என்று நினைத்தேன். அந்த நேரத்தில் என் உறவுக்காரப் பெண்ணுக்கு, வேறு ஒருவரோடு திருமணம் நடந்தது. என் வீட்டில் ஜாதகம் பார்த்தனர். அதில் எனக்கு சொந்தத்தில் திருமணம் நடக்காது என்று தெரிந்தது.
என் மனதை மாற்றிக் கொண்டேன். என் வீட்டு பக்கத்தில் துணிக்கடை வைத்திருந்தார் முஸ்லீம் ஒருவர்; அவருக்கு மூன்று சகோதரர்கள். அவர்கள் அனைவரும் என்னை, "தங்கை' என்று கூறுவர்.
ஆனால், கடைசியில் பிறந்தவர் என்னை பெயர் வைத்துதான் அழைப்பார். அவரை, என் மனசுக்குள் நேசித்தேன்; ஆனால், வெளியே கூறவில்லை. காரணம், "இந்த வயதில் இவளுக்கு இது தேவையா...' என அவர் நினைத்தால்...
ஆனால், அவர் என்னிடம் பலமுறை கடிதங்கள் கொடுத்து இருக் கிறார். நான் ஒரு முறை கூட வாங்கவில்லை; மனதில் ஒரு பயம். ஒரு முறை, "எந்த முறையில் திருமணம் செய்து கொள்வோம்...' என்றார். விளையாட்டாக கேட்கிறார் என நினைத்து, "கிறிஸ்தவ முறையில் செய்து கொள் வோம்...' என்று கூறினேன்.
அதை கேட்டு நான் காதலிக்கிறேன் என்பதை அறிந்து, இவை அனைத் தையும், அவர், பக்கத்து வீட்டு அக்கா விடம் கூறிவிட்டார். அது மட்டுமன்றி, "நாம் இரு வரும் ஓடி போலாமா...' என்று நான் கேட்டதாக, அதிகமாக சேர்த்து கூறி விட்டார்.
என்னை அழைத்து, "இவ்வாறு செய்கிறாயா...' என்று அந்த அக்கா கேட்க, "நீங்கள் கூறுவது போன்று எனக்கு யாரையும் தெரியாது...' என்று கூறி விட்டேன். அதற்கு பின், என் மனதுக்குள் உள்ளவர் என்னிடம் முன்பு போல் பேசவில்லை; நான் சிரித்தால் கூட சிரிப்பது கிடையாது.
ஆனால், இப்போதுதான் அவர் மீது அதிகமாக காதல் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். ஏன் என்றால், அவரை ஒரு நாள் பார்க்காமல் இருந்தாலும், என் மனம் பதறி விடுகிறது. அவர் முஸ்லீம்; நான் இந்து. துணிந்து காதலை வெளிபடுத்தி விடவா... வெளிபடுத்தினால் இது நிறைவேறுமா; இல்லை வேறு ஏதாவது சிக்கல் வந்துவிடுமோ என்று பயமாகவும், குழப்பமாகவும் உள்ளது.
இதனால், என் படிப்பும் தடைபடுகிறது. முன்பு என் மார்க் 90 சதவீதம்; ஆனால், இப்போது 43 சதவீதம் தான். எனக்கு ஒரு நல்ல பதிலை தருமாறு மிகவும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் பதிலை எதிர்பார்க்கும் மகள்.


அன்பு மகளுக்கு—
உன் கடிதம் படித்தேன்.
இப்பொழுதெல்லாம் இதுபோன்ற பிஞ்சிலேயே பழுத்த காதல் கதைகளையே கடிதங்களில் பார்த்து மிகவும் வருத்தத்துடன் எழுதுகிறேன்... எத்தனை இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் எழுதியிருக்கிறேன். அலுக்காமல், சலிக்காமல் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
எனக்கெல்லாம் காதல் என்றால் என்னவென்றே தெரியாது உன் வயசில். நிறைய புத்தகம் படிப்போம்; அதில் வரும் காதல் உன்னதமாக இருக்கும். நிறைய பாட்டு பாடுவோம்; சக சிநேகிதிகளுடன் போட்டி போட்டு எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்வோம். அதைப் பற்றியே கனவு காண்போம்.
அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களிடமே அநாவசியமாய் பேச்சு வைத்துக் கொள்ளத் தயங்குவோம். அப்படியிருக்க, அதிகம் பழக்கமில்லாத ஆணுடன் பேசினால், எங்கள் வீட்டுப் பெரியவர்கள், எங்களை, "பெண்டு' நிமிர்த்தி விடுவர்.
"இவர் தான் உன் கணவர்' என்று பெரியவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, முறையாய் தாலி கட்டியவரிடம் கூட, சரளமாய் பேச பல மாதங்கள் ஆகும்.
"ஆணுக்குப் பெண் சமம்' என்பதை நாங்களும் அறிந்திருந்தோம். ஆனால், இப்படி கடிதம் கொடுப்பதிலும், மனசைக் கண்டபடி அலைக்கழிய விடுவதிலும், ஆணுக்குப் பெண் சமம் என்று நாங்கள் நினைத்ததே இல்லை.
ஒவ்வொரு சமயம் பார்க்கும் போது,"டிவி'யும், பத்திரிகைகளும் மட்டுமல்லாது, இக்காலப் பெற்றவர்களே தங்கள் குழந்தைகள் வீணாவதற்கு ஒரு காரணமோ என்று தோன்றுகிறது.
முஸ்லீமோ, இந்துவோ... பிரச்னை அது அல்ல சின்னப் பெண்ணே... நீ இன்னும் முற்றாதத் தளிர். எந்த விதக் குழப்பமும் இல்லாமல் படிக்க வேண்டிய வயசு. இது போன்ற வயசுகளில்தான் மிக மிக ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். 15 வயதில் மாமன் மகன்... இப்போது 17ல் பக்கத்துக் கடை முஸ்லீம் இளைஞர்... "யாரையாவது காதலித்து, மனசையும், படிப்பையும் பாழாக்கிக் கொண்டால் தான் ஆச்சு...' என்று ஏதாவது சபதம் எடுத்திருக்கிறாயா?
உனக்கு இன்னும் காலம் இருக்கிறது. நன்றாக படித்து, நல்ல வேலையில் அமர்ந்து, உற்றாரும், ஊரும், நாடும் போற்றும் வண்ணம் உயரலாம்.
இன்றைக்கு விளையாட்டாய், "அவளும் என்னை, "லவ்' செய்றா... ரெண்டு பேரும் ஒடிப் போயிடலாமான்னு கேட்டா...' என்று அந்த இளைஞர், தன் பக்கத்து வீட்டு அக்காவிடம் சொன்ன சொல், நாளைக்கு உன் வெற்றிப்பாதையில் நெருஞ்சி முள்ளாய் இருந்தால்... என்ன ஆகும்.
காதலித்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்தால், முதலில் படிப்பை முடி. உன்னை, உன் அழகுக் காகவோ, இளமைக்காகவோ, உன் பெற்றோர் தரும் சீதனத்துக்காகவோ, நீ சம்பாதித்துத் தரப்போகும் பணத்துக்காகவோ அல்லாமல், உன்னை, உனக்காகவே காதலிக்கிறவனை நீயும் காதலி.
அது, பக்கத்து வீட்டு இளைஞனாகவே இருந்தாலும் காத்திருக்கட்டும். உன் படிப்புக்குச் சமமாக அவனும் படிக்கட்டும். உன் பதவிக்கு நிகராக அவனும் நல்ல பதவியில் இருக்கட்டும். அதை விட்டு, அசிங்கமாய், நாலு பேர் அறிய காதல் கடிதங்கள் பரிமாறிக் கொள்வதும், தனிமையில் சந்திப்பதும், "ஓடிப் போய் விடலாமா' என்று ஒருவரையொருவர் கேட்பதும் நிஜமான காதல் இல்லை; இது ஒரு விதமான மயக்கம்; போதை, அவ்வளவே!
மற்றவர்கள் தங்களை ஏதோ சினிமா கதாநாயகன் போல நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் போட்டுக் கொள்ளும் வேஷம். அதுவும், அந்த இளைஞன், எப்போது நீ சொல்லாத வார்த்தையான, "ஓடிப் போயிடலாமா...' என்று கேட்டதாக அந்த அக்காவிடம் கூறினானோ... அது, அந்த அக்காவின் முன்னிலையில் தனக்குத்தானே போட்டுக் கொண்ட மாலை.
ஒரு வேளை, அந்த அக்கா மனசில் ஒரு விதப் பொறாமையை உண்டு பண்ணி, "பார், என் பின்னால் ஓடி வர இத்தனைப் பெண் கள் இருக்கின்றனர்...' என்று காட்டிக் கொள்வதற்காக இவன், உன்னை பலிகடாவாக்கி இருக்கலாம். புத்திசாலிப் பெண்ணாக இருந்தால், இதையெல்லாம் ஒதுக்கு; நீயும் ஒதுங்கு. வீட்டுக்குள் உன்னை நீயே சிறை வைத்துக் கொள். அப்படி சிறைபட்ட நேரத்தை படிப்பில் செலவிடு.
பட்டாம் பூச்சிகள் இறக்கை முளைப்பதற்கு முன், புழுக்களாக, தன்னைத்தானே கூட்டில் அடைத்துக் கொள்வதில்லையா... அது போலத்தான் இதுவும். மனசை ஒரு முகப்படுத்து; எதையும் நிதானமாய், ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து செய். வாழ்த்துகள்!

Wednesday, August 7, 2013

பெற்றோர்களே உஷார்

'ஊர் முழுவதும் விஷக் காற்று!'
பெற்றோர்களே உஷார்
'ஊரே வந்து பூத்தூவ
 ஊர்வலம் போகும் கல்யாணம்...
அம்மா அப்பா கைகோத்து
அட்சதை போடும் சந்தோஷம்...
ஒருமுறைதான் ஒருமுறைதான்
சில சில மகிழ்ச்சிகள் ஒருமுறைதான்..!’ - சேரனின், 'தவமாய் தவமிருந்து’ படத்தின் பாடல் வரிகள் இவை. எத்தனை பெற்றோருக்கு இந்த சந்தோஷத்தைப் பிள்ளைகள் கொடுக்கிறார்கள்? கைப்பிடித்து நடை பழகவைத்த பெற்றோரை உதறித்தள்ளிவிட்டு, காதலன் கரம்பற்றி நடக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. 'நான் காதலுக்கு எதிரியல்ல; காதலன் தவறானவன் என்பதால் எதிர்க்கிறேன்’ என்று சேரன் சொல்வதே பல பெற்றோர்களின் ஆதங்கம். பெண் குழந்தைகளின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரது அறிவுரையாக இருக்கிறது.
பெண் குழந்தைகள் வளர்ப்பில் எங்கே பிரச்னை ஆரம்பிக்கிறது? அதை எப்படி கவனமாக எதிர்கொள்வது? மனநல மருத்துவர் பிரபாகரனிடம் பேசினோம். ''ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ இருவருமே, அவர்களுடைய டீன் ஏஜ் வயதில் சிறப்பு கவனத்துடன் இருக்க வேண்டும். அதில் பெண் குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். ஒருவர் காதல் வயப்படும்போது, விளைவுகளைப் பற்றி அறியாதவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய சிந்தனையில், 'நான் விரும்பியவன்தான் வேண்டும், அவனோடுதான் வாழ்வேன்’ என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கும். அந்த நேரத்தில் அறிவுரைகள் எடுபடாது.
இந்த விபரீதத்தில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற, அவர்களின் பத்தாவது வயதில் இருந்து அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்க வேண்டும். குழந்தைகளுக்குத் தனிப்பட்ட தேவைகள், தனிப்பட்ட ஆசைகள் தோன்றும் வயதும் அதுதான். குறிப்பாக எதிர் பாலினத்தால் எளி தில் கவரப்படும். வாழ்க்கையின் யதார்த்ததை அந்த வயதில் குழந்தைகளுக்கு கவனமாகச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
காதலைப் பற்றி குழந்தைகளுடன் பேசுவதிலும் விவாதிப்பதிலும் பெற்றோர்களுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கும். அதை அறிவியல் பூர்வமாக எடுத்துச்சொல்லி பிள்ளைகளை தெளிவுபடுத்துவது பெற்றோர்களின் கடமை'' என்றார்.
பேச்சாளரும் சமூக ஆர்வலருமான பாரதி பாஸ்கரிடம் பேசினோம். ''ஊர் முழுவதும் விஷக் காற்று பரவி உள்ளது. நம்முடைய வீட்டின் ஜன்னலையும் கதவையும் மட்டும் சாத்திக்கொண்டால், அதில் இருந்து தப்பித்துவிட முடியாது. ஒரு நாள் முழுக்க நாம் கண்காணித்துக்கொண்டே இருந்தாலும், செல்போனிலும் ஃபேஸ்புக்கிலும் குழந்தைகள் பலருடனும் பேசியபடியே இருக்கின்றனர். தீயவை அத்தனையும் அவர்களுக்கு அந்த வழியாகத்தான் குழந்தைகளுக்குள் வருகிறது. இதுபோன்ற வெளியுலகின் வசீகரங்களுக்குக் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க நான் எப்போதும் பரிந்துரைப்பது... வாசிப்பு பழக்கம், உயர்ந்த லட்சியங்களை குழந்தைகள் மனதில் விதைப்பது, எந்தச் சூழலிலும் என்னுடைய பெற்றோர்களின் மனதை நோகடிக்க மாட்டேன் என்ற எண்ணத்துடன் அவர்களை வளர்ப்பது என்ற மூன்று வழிகளைத்தான்.
ஆனால், இவற்றை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டுமானால் பெற்றோர்களும் அதற்கு முன்உதாரணமாக இருக்க வேண்டும். அவர்களிடம் வாசிப்பு இருந்தால்தான் அது குழந்தைகளுக்கு வரும். அவர்கள் குழந்தைகளிடம் அன்பும் அவர்களுக்கு உரிய மதிப்பையும் கொடுக்கும்போதுதான், அது நமக்குத் திரும்பக் கிடைக்கும். குழந்தைகளின் மனதில் உயர்ந்த லட்சியத்தை உருவாக்குவது என்பது பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கூட்டு முயற்சி. இதில் பெற்றோரைவிட ஆசிரியர்களுக்கே அதிக பங்கு உண்டு.
மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அது அவர்களுக்குள், தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். அதுவே உங்கள் மீதான வெறுப்பாகவும் மாறும். அந்த நேரத்தில் யாராவது அன்பாகப் பேசினால், மனம் அந்தப் பக்கம் சாயும். அந்த அன்பைக் கொடுப்பவர்கள் எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும், அதைப்பற்றி குழந்தைகள் யோசிக்க மாட்டார்கள். இதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று சொன்னார்.
பெற்றோர் பாடம் படிக்க வேண்டிய தருணம் இது!

Sunday, August 4, 2013

நான் 30 வயதான ஆண்

அன்பு அக்காவிற்கு — 
நான் 30 வயதான ஆண். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சந்தோஷமான குடும்பம்.
நான் படித்துக் கொண்டிருக்கும்போது 12 வருடங்களுக்கு முன், ஒரு பெண்ணை விரும்பினேன்; அவளும் விரும்பினாள். நாங்கள் நேரில் அவ்வளவாக பேசிக் கொண்டது கிடையாது; எல்லாம் கடிதத்தில் தான். மனசுக்குள்ளேயே குடும்பம் நடத்தி, பிள்ளைகளுக்கு பெயர் கூட வைத்தோம்.
ஜாதி எங்கள் இருவரையும் பிரித்தது. அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் முடிந்து விட்டது. தற்போது, அவளுக்கு இரண்டு குழந்தைகள். சென்ற மாதம் அவளிடமிருந்து கடிதம் வந்தது. அவள், என்னை எள்ளளவும் மறக்கவில்லை. அவள் குழந்தைகளுக்கு, முன்பு நாங்கள் வைத்த பெயரையே வைத்திருக்கிறாள். எந்நேரமும் என்னையே நினைத்து, தனிமையில் அழுது கொண்டிருக்கிறாள். வெளியில் எங்கும் போவதில்லை; சினிமா பார்ப்பதில்லை; புத்தகம் படிப்பதில்லை. சிறைப்பறவையாக வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறாள். 
அவள் கணவனிடமும், பலமுறை என்னைப் பற்றியே புலம்பி இருக்கிறாள். அவளுடைய நல்ல நேரம் அவளுடைய கணவன் ஒரு தெய்வம் போல. "கல்யாணத்திற்கு முன்பே சொல்லியிருந்தால் நான் உங்களை சேர்த்து வச்சிருப்பேன்ல...' என கூறியிருக்கிறார். "உடல் மட்டும் தான் உங்களுக்கு; என் மனசு என்னிடம் இல்ல'ன்னு இவளும் சொல்லி இருக்கா. எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கிறது அந்த தெய்வம்.
நானும், அவளுக்கு கடிதம் எழுதி எவ்வளவோ அறிவுரைகள் கூறினேன்; அவள் கேட்பதாக இல்லை. ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. என் நினைவை அவள் மனதில் இருந்து அகற்றுவது முடியாத காரியம். நானே கூட மறந்துவிட்ட, முன்பு நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் அப்படியே கூறுகிறாள்; முன்பு கடிதத்தில் எழுதிய வாசகங்களை அப்படியே சொல்கிறாள்... "என் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் உன் பெயரைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது...' என்கிறாள். 
"வீடு வரை உறவு; வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை; கடைசி வரை யாரோ...' ன்னாரு கண்ணதாசன். எனக்கு கடைசி வரை உன் நினைவுகள் இருக்கும். உயிர் என்னை விட்டு பிரியும் போது கூட "உன் பெயரையே தான் சொல்லிகிட்டிருப்பேன்' என, எழுதி இருந்தாள். 
இப்ப சொல்லுங்க... என்ன செய்யலாம்? தங்கள் ஆலோசனைப்படி நான் நடக்க விரும்புகிறேன். அந்த பெண் அவள் கணவனுடன் நன்றாக வாழ வேண்டும். என்னைப்பற்றிய நினைவுகளை அவள் மனதிலிருந்து நீக்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? இதற்கு ஒரு நல்ல வழி கூறுங்கள்.
இப்படிக்கு,
— அன்புத் தம்பி.

அன்பு தம்பி— 
உங்கள் கடிதம் கிடைத்தது.
காதலித்தவரையே மணம் முடிப்பது எல்லாருக்கும் அமைவதில்லை. வாழ்க்கை பல விசித்திரமானத் திருப்பங்களை உடைய நாடகம். நாம் அந்த நாடகத்தின் கதாபாத்திரங்கள்; அவ்வளவு தான்! முதல்நாள் ராமாயண நாடகத்தில் ஆஞ்சநேயர் வேஷம் கட்டினவன், அடுத்தநாள் மகாபாரத நாடகத்தில் துரியோதனன் வேஷம் கட்டலாம்...
அப்போது அந்த வேடத்தை செவ்வனே செய்ய வேண்டுமே அல்லாது, "அய்யோ, நான் கட்டை பிரம்மச்சாரியாக ஆஞ்சநேயர் வேஷம் கட்டியவன்... ஒரு பெண்ணின் புடவையைப் பற்றி இழுக்க மாட்டேன்...' என, ஒரு நல்ல நடிகன் சொல்ல மாட்டான். 
இப்போது உங்கள் விஷயத்துக்கு வருகிறேன்... பருவம் என்ற நாடகத்தில் நீங்களும், நீங்கள் குறிப்பிட்ட பெண்ணும் காதலர்களாக நடித்தீர்கள். இப்போது காட்சி மாறி விட்டது. இல்வாழ்க்கை என்ற நாடகத்தில் அவள் இன்னொருவரின் மனைவியாகவும், நீங்கள் வேறொருத்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கணவராகவும் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது பழசை நினைத்து மனதை அலைபாய விடக் கூடாது.
பத்து வருடங்களாக ஒருவரை மணந்து, அவருக்காக இரு குழந்தைகளையும் பெற்றவள், "உடம்பு தான் உனக்கு. உள்ளம் வேறொருவருக்கு' என சொல்வதே தவறு. யோசித்துப் பாருங்கள்... மனசெல்லாம் எங்கோ இருக்க, கணவனின் பக்கத்தில் படுப்பது, மகத்தான துரோகம் என, நீங்கள் நினைக்கவில்லையா? 
அதற்கு ஆரம்பத்திலேயே, அந்தக் கணவரிடம் நடந்ததை சொல்லி, இவள் விலகியிருக்கலாம். 
அவளுக்குத் திருமணமாகி, பல வருடத்திற்கு பின் தான் நீங்கள் மணம் புரிந்திருக்கிறீர்கள். அப்போதே விவாகரத்துப் பெற்று, உங்களிடம் வந்திருக்கலாம். அதைவிட்டு இப்போது நினைத்து, தானும் குழம்பி, தெளிவாய் இருக்கிற உங்களது வாழ்க்கை யையும் அந்தப் பெண் குழப்புவது நியாயமே இல்லை. 
இப்போது நீங்கள் இருவர் மட்டும் இல்லை... உங்கள் மனைவி, அவரது கணவர், உங்கள் இருவரது குழந்தைகள், உங்கள் இருவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்... இப்படி எத்தனை பேருக்கு இதனால் பிரச்னை பாருங்கள்.
மனைவி வேறொருவனை விரும்புகிறாள் என்பது தெரிந்தும், "இதை முன்னாலேயே சொல்லி இருக்கலாம் இல்லே...' என அப்பாவித்தனமாய் கூறும் அவளது கணவர்... எப்படி தம்பி இது போன்ற நல்ல இதயத்துக்கு அவள் துரோகம் நினைக்க முடியும்? அவள் நினைத்தாலும் நீங்கள் நினைக்கக் கூடாது!
இது போல, இந்த விஷயம் எதுவுமே தெரியாத உங்கள் மனைவியையும் எண்ணிப் பாருங்கள். 
சென்றது கனவாகவே இருக்கட்டும். இப்போது கையில் இருக்கும் வாழ்க்கையை உண்மையுடன் நேசியுங்கள். அவளிடம், "நாமிருவரும் காதலித்த குற்றத்துக்காக, நம்மை சுற்றி உள்ள உறவுகளுக்கெல்லாம் தண்டனை தர வேண்டாம்...' என கூறுங்கள்...
இப்போது ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் நாடகத்தில் முழு கவனத்தையும் செலுத்துங்கள்; வெற்றி உங்களுக்கே!
வாழ்த்துகள்!

---------------------------------------------------------
காதல் இருபாலாரும் ஓர் பருவத்தில் சந்திக்கும் உணர்வு. காதலைச் சந்திக்கவும் மாட்டேன், சிந்திக்கவும் மாட்டேன் என்று இறுமாப்புடன் திரிபவர்களையும் ஒரு கட்டத்தில் கட்டிப்போட்டு ஸ்தம்பிக்க வைக்கும் அற்புதமான உயிரோவியம் இந்தக் காதல். விழிக்காதல், விரல்காதல், குரல்காதல், உடல்காதல், உள்ளக்காதல், பார்த்தக் காதல், பார்க்காக் காதல் என்று காதல் பலவகைகள். கரங்கள் இணைந்து விரல்கள் கவிதைகள் பேசுவது மட்டுமல்லாமல் கரங்கள் கொண்டு கடிதம் எழுதுவதும் காதலின் ஒரு வித வார்த்தை சுகமே. காதல் பலருக்கு வெறும் வார்த்தை. சிலருக்கு அவ்வார்த்தைகளே வாழ்க்கை.இந்தப் பெண்ணின் உள்ளத்தில் தோன்றிய காதலைத் தூற்ற மனம் ஒப்பவில்லை. ஆனால் கடந்து போன, இனியும் நடக்க வாய்ப்பில்லாத ஒரு விஷயத்தைச் சிந்தித்துக் காலங்களையும் தன்னைச் சார்ந்தவர்களையும் அவதிக்குள்ளாக்குவது தவறான செயல். காதலித்த போது பிரிய சக்தியில்லையென்றால் போராடியிருக்கலாம், அதை விட்டு விட்டு வேறொருவரை மணம் செய்து குழந்தைகள் பெற்ற பிறகும் காதலரையே நினைப்பது எவ்விதத்தில் நியாயம்? நிச்சயம், இந்தப் பெண்ணிற்குத் தன் முதல் காதலை மறக்க முடியாது தான், அதற்காக நடந்ததையே நினைத்து மனம் குழம்பிக் கணவர், குழந்தைகளிடம் பிடிப்பு இல்லாமல் இருப்பது தவறில்லையா? "நான் வேறொருவரைக் காதலித்து உங்களை மணந்திருக்கிறேன், என்னால் அவரை மறக்க முடியவில்லை, உடல் உங்களுக்கு, மனது அவருக்கு" என்று கணவரையே தோழனாய் நினைத்துக் கூறியும் "முன்பே கூறியிருந்தால் உங்கள் இருவருக்கும் மணம் செய்வித்திருப்பேனே" என்ற சுடுசொல்லின்றி அன்பு செலுத்தும், ஆதரவாய் இருக்கும் கணவரின் காதலை விடவா காதலனின் காதல் பெரிதாக இருந்திருக்கப் போகிறது?பண்பில் உயர்ந்த கணவரின் அன்பை காதலின் வலியை உணர்ந்த இப்பெண்ணால் ஏன் உணர முடியவில்லை? ஏன் முயற்சிக்கவுமில்லை? காதலனும் இவரும் பேசி வைத்தப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டியிருக்கிறார். எப்பேர்ப்பட்ட நல்ல மனதுக்குச் சொந்தமானவர் இக்கணவர், எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட நல்ல கணவர் அமைவர்? இந்தப் பெண் ஒருவரது செய்கையால் இவரது கணவர் மற்றும் இரு குழந்தைகள் காதலரின் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் என்று எத்தனை பேர் நிம்மதி இழந்து தவிக்கப் போகிறார்கள். இன்னார்க்கு இன்னார் என்று தேவன் எழுதி வைத்தக் கணக்கை மாற்ற முடியாது, இப்பெண்ணின் முன்னாள் காதலர் வேறொருத்தியின் கணவர். இந்தப் பெண் உண்மையான காதல் கொண்டிருந்தால் மணமான காதலனின் நல்வாழ்விற்கு மனதிற்குள் தவம் செய்து நன்றாக இருக்க வேண்டியிருக்க வேண்டும், மறக்க முடியாமல் தவிப்பதை எழுதி மீண்டும் காதலனின் நீரோட்டமான வாழ்க்கையில் புகுந்து அவர் மனதிலும் சலனத்தையும் சலசலப்பையும் சஞ்சலத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடாது. பொல்லாத கணவர் என்று குமுறியிருந்தால் கூட இவரது தேடலில்/ பழைய நினைவுகளில் நியாயம் இருந்திருக்கும். முகம் நனைக்கும் அகம் நினைக்கும் தென்றலான காதல் மனதின் ஓரத்தில் நந்தவனப்பூக்களாய்ப் பூத்துக் குலுங்கட்டும். அந்தப் பூக்கள் நீங்கள் மட்டும் சில நேரங்களில் நுகரவே அன்றி விற்பனைக்கன்று. மயிலிறகாய் வருடும் சில நினைவுகள் மனதினில் சுமக்க வேண்டுமேயன்றி மீண்டும் துளிர்க்காதா? என்று ஏங்கக் கூடாது. நினைவுகளிலே காலங்களைக் கழிக்காமல் நினைவுகளுக்குச் சில் போது நேரம் ஒதுக்கலாம். இவரது முன்னாள் காதலர் ஒரே ஒரு கடிதம் எழுத வேண்டும், தன் மனைவியை மிக அதிகமாக நேசிப்பதாகவும் இவரை நினைப்பதற்குக் கூட நேரமில்லை என்பது போலவும் கடிதம் அமைய வேண்டும். "நான் நேசித்தப் பெண்ணானாலும் என்னால் மீண்டும் உன்னைச் சிந்திக்க முடியாது, என் மனைவி என் மேல் உயிரே வைத்திருக்கிறாள். அவளை நான் மிகவும் நேசிக்கிறேன். கடவுள் எனக்குக் கொடுத்த வாழ்க்கையைக் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். உனக்குக் கடிதம் எழுத எனக்கு நேரம் இருப்பதில்லை, அதனால் என் கடிதத்தை எதிர்பார்க்காமல் உன் வாழ்க்கையை வாழ், இதுவே என் கடைசிக்கடிதம், கடிதத்தொடர்பில் இல்லாவிடினும் ஒரு நல்ல நண்பனாய் உன் வாழ்விற்காய் வேண்டிக் கொள்வேன். " என்று ஒரே ஒரு கடிதம், மீண்டும் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கடிதம் வந்தால் கூட அதற்குப் பதில் எழுத முனையக் கூடாது. இக்கடிதத்தைப் பார்த்து அந்தப் பெண் மாறலாம், மாறாமல் மனதிற்குள்ளே புழுங்கலாம், அது இந்தக் காதலரின் பிரச்சினையில்லை. நன்றாகச் சென்று கொண்டிருக்கும் இருவர் வாழ்க்கையிலும் இவர்களது கடிதப்போக்குவரத்தே சிக்கலை உண்டாக்கி விடக் கூடாது.